மகளிர் தினம்

மார்ச் 8, 2010

மகளாய்ப் பிறந்தாய்

சகோதரியாய் வளர்ந்தாய்

மனைவியாய் வாழ்ந்தாய்

தாயாய் நிலைத்தாய்

பெண்ணாய் வாழ்ந்திடலே மாதவம் செய்தலம்மா

என்றென்றைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

Advertisements

அம்மா

நவம்பர் 4, 2009

எல்லோரும் பாடும் பாடல் நீ
அன்பிற்கான தேடல் நீ
அர்பணிப்பின் சுவாசம் நீ
அமுத மொழிகளின் தேசம் நீ
சகிப்புத்தன்மையின் சிகரம் நீ
கடவுளின் உருவம் நீ
எனக்காக சுவாசித்தவள் நீ
என்னை அதிகம் நேசித்தவள் நீ
நீ இன்றி உலகில்லை
மூன்றெழுத்து அதன் எல்லை


நம் வீட்டுக் கடவுள்

மே 11, 2009

ஈருயிர் ஒருயிராய் கலந்து பின்
அவ்வோருயிர் ஈருயிராய்ப் பிறந்து
தன்னுயிர் மறந்து தான் பெற்ற உயிரை
ஆருயிராய் நினைந்து அம்முகம்
கண்டபோதெல்லாம் உலகம் மறந்து
உள்ளம் மகிழ்ந்து ஒவ்வோர் நொடியும்
உன் பிள்ளைக்காகவே வாழும் என் அன்னையே
நின்னைப் போற்ற நாட்காட்டியில்
ஓர் நாளைக் காட்டினால் அது முறையோ
வருடத்தில் ஓர் நாளல்ல என்
வாழ்நாள் முழுவதும் உனைப் போற்றி
வாழ்வாபிஷேகம் செய்வேன் நான் உன் சேய்யல்லவா
எத்தனை கடவுள்கள் உலகத்திலே
அத்தனை கடவுள்களுக்கும் ஓர் உருவம் நீ
படைத்து காத்து அழிப்பவன் கடவுளென்றால்
படைத்து காத்து வாழவைக்கும் நீ
கடவுளுக்கெல்லாம் கடவுளல்லவா
நீ தந்த வரம் அம்மா நான்,
தவமின்றி நான் பெற்ற வரம் அம்மா நீ
உருவமாய் இல்லாவிட்டாலும் என்றும்
என் உயிராய் வாழ்பவளே
என்றும் எனைக் காக்க நீ உண்டு
நாம் வாழும் அனைத்துப் பிறவிக்கும் நம் அன்புண்டு.