காதலில் கொடுமை பிரிவு

ஜூலை 17, 2009

காதலில் கொடுமை பிரிவு என்றாய்
பிரிவில் இனிமை நினைவுகள் என்றாய்
நினைவில் கொடுமை வெறுமை என்றாய்
வெறுமையில் இனிமை அமைதி என்றாய்
அமைதியின் உருவம் என் கண்கள் என்றாய்
கண்கள் நிறைய காதல் தந்தாய்
கண் மூடியும் கனவாய் நின்றாய்
காயங்களோடா பிரிந்து சென்றாய்

காதலில் கொடுமை பிரிவு என்பேன்………

Advertisements

கனவுகள் மட்டுமே துணை

திசெம்பர் 24, 2008

 

கனவுகளை நோக்கி

கனவுகளை நோக்கி

 

 

 

கால்நடையோடு கால்நடையாக செல்கிறாயே தம்பி

உன் கண்களின் ஏக்கம் என் மனதை அழுத்துகிறது

பட்டு விரிப்பிலும் பளிங்கு தரையிலும்

நடந்து பழகிய நம் பாசமிகு தம்பி

அறிந்திருக்கமாட்டான் தினம்

முட்களின் முத்தங்கள் தான்

உன் பாதங்களுக்கென்று

விமானியாக விஞ்ஞானியாக மருத்துவனாக

மதியாளனாக அரசனாக ஏன் ஆண்டவனாகக் கூட

கனவு காண கற்றுக்கொடுத்த நம் தம்பிகளுக்கு மத்தியில்

ஏன் தம்பி உன்னை மட்டும் கரிசல் காட்டிலும் கருவேலங்காட்டிலும்

கற்றாழைச் செடிகளோடும் கண்ணீர் துளிகளோடும்

காய்ந்து போன உன் கனவுகளை

காட்டுச் செடிகளுக்கு உரமாக்க

அனுப்பிவிட்டோம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம்

உனக்காக ஒரு நாளாவது வாழ வேண்டுமென்று

ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கிறோம்

எல்லா நாளுக்கும் 24  மணிநேரம் தான் என்று தெரிந்துகொண்டு