காதல் விளையாட்டு

காதல் கற்றுக்கொடுத்து வருவதில்லை

காயப்பட்டாலும் மறைவதில்லை

காதல் என்பது உணர்ச்சி தான்

உன்னைக் கண்டதும் அதன் உருவம் அறிந்துகொண்டேன்

காதல் எனக்கு என்றும் வராத விளையாட்டு என்றேன்

நான் கற்றுக்கொடுக்கிறேன் என்றாய்

கற்றுக்கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டாய்

வேறு யாருடனும் எனக்கு விளையாடப் பிடிக்கவில்லை

கவிதையாகப் பேசுகின்றேன் என்றாயே

நான் உன்னைப் பற்றி மட்டும் தான் பேசுகின்றேன் என்று உணர்ந்து கொண்டாயா 

வாசம் இல்லை என்றாலும்

காகிதப் பூக்களைச் சூடிக் கொள்கிறாய்

நீயில்லாமல் வெளிச்சமில்லா விளக்காய் இருக்கிறேன்

எறிவதாய் இருந்தாலும் உன் வீட்டுக் குப்பையில் எறிந்துவிடு

2 Responses to காதல் விளையாட்டு

  1. Divya சொல்கிறார்:

    கவிதை அருமை:)

vaasal -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி